முதன் முறையாக இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 42 ஆவதின் பிரிவின் படி 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
1988 இல் முதன் முறையாக சகல எட்டு மாகாணங்களிலும் தேர்தல்கள் நடாத்தப்பட்டன. 05 டிசம்பர் 1988 ஆம் திகதி, தெரிவு செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது. மிகக்குறுகிய காலமே தொழிற்பட்ட இந்த மாகாண சபையானது 1990 ஜுன் மாதம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கென ஒரு தேர்தல் நடாத்தப்படவில்லை. கௌரவ ஆளுநரின் நிருவகிப்பின் கீழ் இதன் ஆட்சி தொடரப்பட்டது.
20 ஆண்டுகளின் பின் இலங்கை ஜனநாயகக் குடியரசின் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி 16 ஐப்பசி 2006ம் திகதி இணைந்த வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகமானது வடக்கு மாகாண நிர்வாகம், கிழக்கு மாகாண நிர்வாகம் என இரு வேறு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது.
அதி மேதகு ஜனாதிபதி அவர்களால் றியர் அட்மிரல் மோகான் விஜயவிக்கிரம USP, NDC, PSC அவர்கள் பதில் ஆளுநராக 22 டிசம்பர் 2006 தொடக்கம் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளார், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் 01 ஜனவரி 2007 ம் திகதி தொடக்கம் செயற்படத் தொடங்கின.
தற்போது ஐந்து அமைச்சுக்கள் செயலாளர்களினால் தலைமையேற்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. இவற்றுக்கான செயலாளர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டார்கள். அமைச்சுக்களின் விபரம் பின்வருமாறு:
- விவசாய, காணி, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன கடற்றொழில் அமைச்சு
- கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு
- சுகாதர சுதேசவைத்தியத்றை அமைச்சு
- உட்கட்டமைப் அமைச்சு
- உள்ளுராட்சி மீள் அமைச்சு நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு, கூட்டுறவு, கிராம அபிவிருத்தி, கைத்தொழில், சமூக சேவைகள் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சு
16 திணைக்களங்களும் மேற்படி ஐந்து அமைச்சுக்களின் வெவ்வெறு பிரிவுகளின் கீழ் செயற்பட்டு வருகின்றன.
விவசாயத் திணைக்களம்.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்.
காணி நிர்வாகத் திணைக்களம்.
நீர்ப்பாசனத் திணைக்களம்.
கல்வித் திணைக்களம்.
விளையாட்டுத் திணைக்களம்.
சுகாதாரத் திணைக்களம்.
சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்.
உள்ளூராட்சித் திணைக்களம்.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்.
முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சித் திணைக்களம்.
கைத்தொழில்துறை திணைக்களம்.
வீதி அபிவிருத்தித் திணைக்களம்.
சமூகசேவைகள் திணைக்களம்.
கட்டடங்கள் திணைக்களம்.
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம்.
மாகணத்திறைசேரி, மாகணத்திட்டமிடல் செயலகம், மாகாணக் கணக்காய்வுத் திணைக்களம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சட்டப் பிரிவு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பிரதம செயலாளர் செயலகத்தின் கீழ் செயற்படுகின்றன.
மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, பிராந்திய ஆணையாளர் அலுவலகம் போன்றன ஆளுநர் செயலகத்தின் செயற்பரப்பெல்லைகளின் தொழிற்படுகின்றன.
No comments:
Post a Comment