இவ்வாறான வினாக்களில் பயிற்சி பெறுங்கள்.

1) ஒரே வகையான 20 பொருட்களின் கொள்விலையானது X பொருட்களின் விற்பனை விலைக்கு சமமாகும் , இலாபம் 25% எனின், X இன் பெறுமானம் என்ன?
1) 15 2) 16 3) 18 4) 25
2) 17 பந்துகளை ரூபா 720 ற்கு விற்கும்போது அங்கு 5 பந்துகளின் கொள்விலைக்கு சமம் ஆன தொகை நட்டம் ஏற்பட்டது. ஒரு பந்தின் கொள்விலை என்ன?
1)ரூ 45 2)ரூ 50 3)ரூ 55 4)ரூ 60
3) 1 kg 72 ரூபாகவுள்ள அரிசியையும் , 1 kg 57 ரூபாகவுள்ள அரிசியையும் எவ்விகிதமாக கலந்தால் 1 kg ரூபா 63 ஆக விற்க முடியும்?
1) 1 : 3 2) 2 : 3 3) 3 : 4 4) 4 : 5
4) இரு எண்கள் முறையே மூன்றாவது எண்ணை விட 20%, 50% அதிகமாகும், இவ்விரு எண்களின் விகிதம் என்ன?
1) 2 : 5 2) 3 : 5 3) 4 : 5 4) 6 : 7
5) 100m ஓட்டப்போட்டியில் B ஐ A யினால் 25m முந்த முடியும், C ஐ B யினால் 4m முந்த முடியும் எனின் அதே போட்டியில் A யினால் C ஐ எத்தனை மீற்றரால் முந்த முடியும்?
1) 21m 2) 26m 3) 28m 4) 29m

No comments:

Post a Comment